Hobbit

Wednesday, August 24, 2011

எனது முதல் தமிழ் வலைப்பதிவு

தமிழில் எழுதியோ, நல்ல புத்தகங்களை படித்தோ வெகு காலம் ஆகிவிட்டதை நினைக்க வெட்கமாக இருக்கிறது. எனது தமிழறிவை சிறிதேனும் தேற்றிக்கொள்ளும் விருப்பம் சில நாட்களாகவே மேலோங்கியுள்ளது.

ஏர்டெல் சூப்பர் சிங்கரில் இந்த பாட்டை கேட்டபோது அதன் மூலப்படிவத்தை கேட்க மிக ஆவலாக இருந்தது. யூட்டியூபில் தேடிய போது ஒலி வடிவம் மட்டும்தான் கிடைத்தது. அதை மேலேற்றிய ரசிகர் பாட்டை பற்றி சில சுவாரசியமான செய்திகளை கொடுத்திருந்தார். அதைப் படித்தபின் பாடல் இன்னும் அழகாக செவியில் பட்டது.   

படம்: முத்தான முத்தல்லவோ
பாடியவர்கள்: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, எஸ்.பி.பி
இசை : மெல்லிசை மன்னர் எம்ஸ.எஸ்.விஸ்வநாதன்
பாடாலசிரியர்: வாலி
வருடம்: 1976



ராகத்தை பற்றியோ, அழகாக ஆங்காங்கே வரும் சங்கதிகளை பற்றியோ பேச ஞானம் இல்லையென்றாலும் , மனதிற்கு பிடித்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன்.   


மேலேற்றிய ரசிகர் சொன்னதை போல் இது வெறும் பாடகர்களுக்கிடையே மட்டுமன்றி,  கீபோர்டுக்கும் வயலினுக்கும் இடையே ஒரு உரையாடலை போல் பட்டது. எவ்வளவு அழகாக இசையை அமைத்திருக்கிறார்! எம்.எஸ்.வி.யின் குரல் வரும் முன் கீபோர்ட் இசையும், எஸ்.பி.பி. பாடும் முன் வயலின் ஓசையும் வருவது; எம்.எஸ்.வி. குரலில் விழும் சங்கதிகள் கீபோர்ட் இசையை போலவும் எஸ்.பி.பி. யின் குரலில் அது வயலின் இசையை போலவும் அமைந்ததைப்போன்று எனக்கு தோன்றியது. பாடலின் இறுதியில் இரண்டு கருவிகளும் பேசிக்கொள்வது கேட்க கேட்க திகட்டாத இனிமை.


பாடல் வரிகளும் வசீகரமானவை. ஸ்வரங்களான பஞ்சமம், தைவதம் கொண்டு பெண்ணை விவரித்ததின் அர்த்ததை தேடியதில் ஸமஸ்கிருதறிவும் பெருகிற்று. ;)

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

பஞ்சமம் பேசும் பாவையர் என்றும்
பஞ்சமம் பேசும் பாவையர் என்றும்
பஞ்சணை போடும் எனக்காக
தைவதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக
இனிதாக

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

என்னுடம் வாழும் இன்னொரு ஜீவன்
என்னுடம் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் உன்புகழ் பேச
தைவதம் ஆகும் எதிர்காலம்
எதிர்காலம்

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

தேன் சுவை கிண்ணம் ஏந்தியவன்னம்
நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோஹனம் என்னும் வாகனம் மீது
தேவதை போலே அவள் வந்தாள்

எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்

கீதம் அவளது வலையோசை
கீதம் அவளது வலையோசை
நாதம் அவளது தமிழோசை
தமிழ் ஓஓஓஓஓஓசை

No comments:

Post a Comment